Posts

விதி வலியது

 அன்புடை நெஞ்சன் பண்புடை பேதை,  தள்ளு நடையாய் தவழ்ந்திடும் காதல், வஞ்சம் ஏதும் நெஞ்சிடை இல்லான், கன்னி அவளிடை வாஞ்சையைக் கண்டான்,  காதலின் குமரன் காவியம் பாட, ஓவியப் பேதை நாணத்தில் ஆட , பூமகள் நாணத்தில் மயங்கிய காளை, கண் விழி ஓரம் தன்னுடைய என்றான், பூவையை மெல்ல தன் கரம் சாய்த்து,  பரிதவித்த தேகத்தை ஏற்று, கேள்வி ஒன்று செவிதனில் கேட்க, தத்தளித்து ஓடிச் சென்றாள் . "கயல் விழி ஓரம் நீர் துளி பெறுக , உன்னுயிர் நான் என சொல்வது எந்நாள்? கோமகன் ஆசைக்கு விடை கொடு இந்நாள்! சூழலின் சூழ்ச்சியில் திசை மறந்தாட,  பாவையின் தேன்குரல், செவி மறந்தாட,  நடுநிலை செய்யா விதி செய்த தர்மம்,  பூவையின் பந்தம் வேறொரு சொந்தம்.  திருமணக் கோலத்தில் உதிர்த்திடும் கண்ணீர்;  சொந்தங்கள் யாவும் தனக்கென ஆட, இரு துளி கண்ணீர் கோமகனை நாட, கேட்க அவனும் ஏற்க மனமும்   எங்கிருப்பது,  விதியே அறியும், சதியாய்த்தெரியும். செங்கதிர் தாசன்